முருங்கைக்கீரை அடை

Loading...

முருங்கைக்கீரை அடைதுவரம்பருப்பு & அரை கப், கடலைப்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி & கால் கப், புழுங்கலரிசி & கால் கப், துளிரான முருங்கைக்கீரை & ஒரு கப், தேங்காய் துருவல் & கால் கப், காய்ந்த மிளகாய் & 6, உப்பு & தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கேற்ப.
பருப்பு வகை, அரிசி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வதக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும்.


குறிப்பு:
அடைகளை சுடும்பொழுது அதன் நடுவில் சிறு ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர் திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கைக்கீரையை வதக்கிப் போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply