முருங்கைக்காய் வறுவல்

Loading...

முருங்கைக்காய் வறுவல்

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 2 கப் (சற்று நீளமாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவுசெய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.

பின்னர் சோம்புத் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, நீளமாக நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை போட்டு பிரட்டி, சிறிது உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து காயை வேக வைக்கவும். காய் வெந்ததும், அதனை இறக்கி கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

இதோ உடலுக்கு வலுவூட்டும் முருங்கைக்காய் வறுவல் தயார்!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply