முருங்கைகாய் சாப்பிடுவதால் 7 நன்மைகள் உண்டாகும்

Loading...

முருங்கைகாய் சாப்பிடுவதால் 7 நன்மைகள் உண்டாகும்முருங்கைக் காயை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? குறிப்பாக குழந்தைகள் விரும்பி உண்ணும் காய்களில் இதுவும் ஒன்று.

அதன் சுவை எல்லாரையும் கட்டிபோட வைத்து விடும். நாவில் எச்சில் ஊற வைக்கும்.
முருங்கைக்காய் மட்டுமல்லாமல், முருங்கை மரத்திலுள்ள ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் கொண்டவைமுருங்கை இலையும் அதிக சத்து கொண்டவை.
இதயத்தை வலுவாக்குபவை. அதன் மரத்தின் பட்டைப்பகுதியும் மருத்துவ குணம் கொண்டவை.
இத்தகைய முருங்கை சுவையோடு ஆரோக்கியத்தையும் அள்ளித் தருபவை. அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.


முருங்கைப் பூ:

முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைக் கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.
வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.


முருங்கைப் காய்:

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்கும். பிஞ்சு முருங்கைக்காய் ஒரு பத்திய உணவாகும்.
இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது இன்னும் சுவையையும் சத்தையும் தரும்.
வயிற்றுப் போக்கை குணப்டுத்துகிறது. வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்து.
முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.
முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும்


முருங்கை இலை :

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
நச்சுக்களை அகற்றும். முருங்கை இலைகளில் இரும்பு, கால்சியம் ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும்.
பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்தம் அதிகரிக்கும்.
எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் உள்ளது.
கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும்.


முருங்கைப் பட்டை :

முருங்கைப் பட்டை, இரும்பு சத்து நிறைந்தது. உணவில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply