முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா அப்படியெனில் இதை படியுங்கள்

Loading...

முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா அப்படியெனில் இதை படியுங்கள்இன்றைய காலகட்டத்தில் பலரும் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியை நோக்கி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை. இதனால் பலரும் முதுகு வலியால் அவதிபடுகின்றனர். மேலும் தொடர்ந்து வாகனப் பயணம், உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, அமரும் முறையில் அலட்சியம், சரியான இருக்கை வசதி இல்லாதது போன்ற பல பிரச்சனைகளும் முதுகு வலிக்குக் காரணமாக அமைகின்றன.

உங்களுக்கு முதுகு வலி வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. வேலை செய்யும் இடத்திலும், சில விஷயங்களிலும் கவனம் செலுத்தினாலே முதுகு வலி உங்களை நெருங்காது. வாருங்கள், அவற்றைப் பற்றி இப்போது தெரிந்துக்கொள்வோம்…

* கால்சியம், எலும்புக்கு முக்கியமாக தேவைபடுவது. நாம் உணவில் கால்சியத்தை சேர்த்துக்கொண்டாலும், அந்த கால்சியத்தை உடலில் தக்க வைத்துக் கொள்ள வைட்டமின் டி தேவைப்படுகிறது. வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் நாம் உட்கொள்ளும் கால்சியத்தை உடல் ஏற்காது. எனவே, வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் தான். இதைத் தவிர, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்கக்கூடியது.

* வைட்டமின்கள் மற்றும் அல்ல தாதுக்களும் எலும்பிற்கு மிக முக்கியமானது. எலும்பின் வளர்ச்சி மற்றும் வலிமையை சீராக அமைத்துக்கொள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை உணவில் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* உடற்பயிற்சி எப்போதுமே உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது. சிறு சிறு உடற்பயிற்சிகள் முதுகு வலிக்கு நல்ல தீர்வை கொடுக்கக்கூடியவை. நாற்காலியில் உட்கார்ந்து மூட்டு மற்றும் கால்கள் நேராக நீட்டியபடி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொடுங்கள். ஒரு 20 முறை இதனை செய்யுங்கள். பழக பழக ஒரு 2 நிமிடம் வரை செய்யலாம். உங்களுக்கு மூட்டு வலி இல்லை என்றால் கீழே தரையில் மண்டியிட்டு அவ்வபோது உட்காருங்கள்.

* அலுவலகத்திலோ, வீட்டில் சாதாரணமாக டி.வி. பார்க்கவோ உட்காரும் போது மிக கவனமாக நேராகவும், சரியான உடல் தோரணையிலும் அமர வேண்டும். இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு அவ்வபோது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்காரப் பழகிக்கொள்ளுங்கள்.

* சாப்பாட்டிலும் அக்கறை செலுத்த வேண்டும். பூண்டு, மஞ்சள், இஞ்சி போன்ற அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு அதிகம் இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரீட்சை, பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை உணவில் முக்கியப் பங்காக வைத்துக்கொள்ளுங்கள்.

* முதுகு வலியால் அவதிப்படும் போது வெந்நீர் குளியலில் ஈடுபடுவது நல்லது. எனவே, சோம்பல் படாமல் முதுகு வலிக்கும் நேரத்தில் வெந்நீரில் குளியுங்கள். இது நல்ல பலனையும், உற்சாகத்தையும் தரும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply