முதல் குழந்தை பெற்ற தாய்மார்க்களுக்கான வைத்தியம்

Loading...

முதல் குழந்தை பெற்ற தாய்மார்க்களுக்கான வைத்தியம்பிறந்த குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எதற்காக குழந்தை அழுகிறது, வாந்தி ஏன் எடுக்கிறது என்று புரியாமலேயே சில தாய்மார்கள் தவிப்பர்.
முதல் குழந்தை ஈன்றிருக்கும் தாய்மார்க்களுக்கான குட்டி குட்டி பாட்டி வைத்தியம் இதோ காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். இதனால் குழந்தையின் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் கிடைக்கும். அதை வாங்கி, வேகும் சாதத்தில் போட்டு எடுத்து, உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால், நாக்கில் உள்ள மாவு அகன்று, குழந்தை ருசித்துப் பால் குடிக்கும். குழந்தையின் வாந்திக்கு, வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை, அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டு பிழிந்து, வடிகட்டி ஊற்றினால், வாந்தி சட்டென்று நின்றுவிடும். குழந்தைகள் மலம் கழிக்க கஷ்டப்பட்டால், வெந்நீர் ஊற்றி பார்க்கவும், இல்லையென்றால் உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு, தண்ணீரை ஊட்டினால் பிரச்சனை தீர்ந்துவிடும். பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. குழந்தைகளுக்கு குடிக்க சங்கு, வெந்நீர் கொடுத்தால் குழந்தையின் உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மருத்துவரிடம் செல்லாமல், குட்டி குட்டி பாட்டி வைத்தியமும் குழந்தைகளுக்கு செய்வது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply