முட்டை பஜ்ஜி

Loading...

முட்டை பஜ்ஜி

தேவையான‌ பொருட்க‌ள் :

முட்டை – 3
கடலை மாவு – அரை டம்ளர்
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ – கால் தேக்கரண்டி
மிளகு தூள் – சிறிது
ரெடி கலர் பொடி – கால் தேக்கரண்டி
இட்லி சோடா – சிறிது



செய்முறை :

* முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒவ்வொரு முட்டையையும் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது மிளகு தூள், உப்பு தூவி கொள்ள‌வும்.

* ஒரு பாத்திரத்தில் க‌ட‌லைமாவு, அரிசி மாவு, உப்பு, மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு எடுத்து பஜ்ஜி மாவுவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க‌வும்.

* சுவையான‌ முட்டை ப‌ஜ்ஜி ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply