முகப்பரு கரும்புள்ளியா இயற்கையான பீல் ஆஃப் மாஸ்க் கொண்டு அகற்றலாம்

Loading...

முகப்பரு கரும்புள்ளியா  இயற்கையான பீல் ஆஃப் மாஸ்க் கொண்டு அகற்றலாம்சிலருடைய சருமத்தை உற்று கவனித்தால், சருமத்தின் துவாரங்கள் நன்றாக தெரியும்படி பெரிதாகவே இருக்கும். இந்த மாதிரி பெரிய துவாரங்கள் உள்ள சருமம் நிறைய பிரச்சனைகளை தரும். அழுக்கு, இறந்த செல்கள், பாக்டீரியா ஆகியவை துவாரத்தில் அடைபட்டு வெளிவராது. முகப்பரு, கரும்புள்ளி, கருமை ஆகியவை ஏற்படும். முதுமையை எளிதில் அளித்துவிடும். இவற்றினை பீல் ஆஃப் மாஸ்க் கொண்டு அகற்றலாம்.இந்த மாஸ்க்கை நம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

தேவையானவை :
முட்டையின் வெள்ளைக் கரு – 1 எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் பிரஷ் -1 மெல்லிய டிஷ்யூ தாள் – தேவையானவைமுட்டையின் வெள்ளைக்கருவை தனியே எடுத்து, அதில் தேன், எலுமிச்சை சாற்றினை சேருங்கள். பின் நன்றாக கலக்கி, பிரஷ்ஷைக் கொண்டு, முகத்தில் தடவவேண்டும். கண்கள், வாய் பகுதியை தவிர்த்து மீதி இடங்களில் லேயராக தடவ வேண்டும். பிறகு அதன் மேல் மெல்லிய டிஷ்யூ தாளை படரச் செய்யுங்கள்.20 நிமிடங்களுக்கு பிறகு மெதுவாய் டிஷ்யூ பேப்பரை எடுங்கள். அதனோடு, அழுக்குகளும் சேர்ந்து வந்துவிடும். சருமத்தின் துவாரங்கள் சுருங்கி, சின்னதாகிவிடும். இது போல் வாரம் இரு முறை செய்தால், அழுக்கு, இறந்த செல்கள் ஆகியவை நீங்கி, சருமம் இளமையோடு இருக்கும்.இந்த மாஸ்க் போடும் போது பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் முகத்தில் சுருக்கம் ஏற்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply