முகப்பருவை விரைவில் மாயமாக மறையச் செய்வது எப்படி

Loading...

முகப்பருவை விரைவில் மாயமாக மறையச் செய்வது எப்படிசருமத்தில் எந்த தழும்புகளும் இல்லாமல் சுத்தமாய் இருப்பது எல்லாருக்கும் பிடித்தமானது. ஆனால் என்ன செய்ய முகப்பருக்கள், கரும்புள்ளிகள் நாம் விரும்பாமலே வந்துவிடுகிறது.

அதிக எண்ணெய் சுரக்கும் சருமங்களில் முகப்பரு, கரும்புள்ளி, மற்றும் அழுக்குகள் சேர்ந்து முகத்தை பாழ்படுத்தும். சருமத்தை தவறாமல் பராமரித்து வந்தாலே முகப்பருக்களை தடுக்கலாம்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க முக்கியமாய் கொழுப்பு உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும். அவை சருமத்தின் அடியில் சேர்ந்து, எண்ணெயை அதிகம் சுரக்க வைக்கும். முகப்பருக்களை அதிகரிக்கச் செய்துவிடும்.

பின்னர் எண்ணெய் சருமம் இருப்பவர்கள் அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இதனால் அழுக்குகள் சேராமலும், எண்ணெய் முகத்தில் தங்குவதும் தடுக்க முடியும்.

மேலும் இங்கே குறிப்பிட்டுள்ள வழிகள் உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் குறைய ஆரம்பிக்கும். அதன் தழும்புகளும் மறைந்து, சருமம் கிளியராகும்.


ஐஸ் ஒத்தடம் :

இது முகப்பருக்களை குறைக்க வழிவகுக்கும். ஐஸ்கட்டியை ஒரு பருத்தித் துணியினால் மூடி, முகத்தில் தேயுங்கள். ஒரு நாளைக்கு 3 முறையாவது தேயுங்கள். இவை முகப்பருக்களை சுருங்கச் செய்யும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். எண்ணெய் சுரப்பது தடுக்கப்படும். சரும துவாரங்களும் சுருங்கும்.


டூத் பேஸ்ட் :

டூத் பேஸ்ட்டில் பேக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் உள்ளது. வீக்கத்தினை கட்டுப்படுத்தும். இரவு தூங்கச் செல்லும் முன் டூத் பேஸ்டினை சிறிது எடுத்து முகப்பருக்களின் மீது தடவுங்கள். விரைவில் குணமாகிவிடும்.


தேன் மற்றும் பட்டைபொடி :

தேனில் சிறிது பட்டைபொடியை கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். இரண்டிற்கும் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள், முகப்பருக்களின் மீது அதிவேகமாய் செயல் புரியும். சீக்கிரமாக முகப்பருக்கள் மறைந்துவிடும்.


தேயிலை மர எண்ணெய் :

இது பல்வேறு மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் கிருமி நாசினியாக செயல்படுகிறது. தேயிலை மர எண்ணெயில் சிறிது நீர் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்தபின் கழுவி விடுங்கள். இது பேக்டிரியாக்களை கொல்லும். முகப்பருக்களை சுருங்கச் செய்து, அதன் தழும்புகளை போக்கிவிடும்.


ஆவி பிடித்தல் :

இது முகப்பருக்களை போக்க மிகச் சிறந்த வழியாகும். சுடு நீரில் மஞ்சள், வேப்பிலை ஆகியய்வற்றை கலந்து அதில் ஆவி பிடியுங்கள்.

உள்ளிருந்து தொற்றுக்களை அழித்துவிடும். முகத்தில் எண்ணெய் வழியாது. சரும துவாரங்களில் இருக்கும் அழுக்குகள் வெளிவந்துவிடும். வாரம் இரு முறை செய்து பாருங்கள். எப்போது முகப்பருக்கள் உங்களை நெருங்காது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply