முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் ஃபேஷியல் ஸ்கரப்கள்

Loading...

முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் ஃபேஷியல் ஸ்கரப்கள்உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய் வழிவது போல் உள்ளதா? அப்படியானால் சருமத்தை அவ்வப்போது ஸ்கரப் செய்யுங்கள். ஏனெனில் ஸ்கரப் செய்வதால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, ஸ்கரப் செய்தால் சருமம் மென்மையாக புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
சரி, இப்போது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களைப் பார்ப்போமா…!

* ஆப்பிளை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதுடன், சருமத்துளைகளும் மறைய ஆரம்பிக்கும்.

* பப்பாளியை நன்கு அரைத்து, அதில் சிறிது அரிசி மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* காபி தூளில் சர்க்கரை சேர்த்து, அத்துடன் 2 துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

* பால் பவுடருடன் சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினாலும், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply