முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்

Loading...

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும். வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது.

முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும். புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், புருவங்களுக்கு இடையில், அதிக இடைவெளி இருப்பதே அழகாக இருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக்கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறைத்து விடும்.

மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறைக்கப்பட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அளவை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறியதாகத் தெரியும்.

சிறிய நெற்றியை கொண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண்டும். புருவம் மிக சிறியதாக இருப்பவர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply