மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்

Loading...

மிளகின் அற்புதமான மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்நமது பாரம்பரியத்தில் மிளகாய் என்று ஒன்று இருந்ததாய் வரலாற்று குறிப்புகள் இல்லை. ஏனெனில், மிளகை தான் உணவில் காரத்திற்கு சேர்த்து சமைத்து வந்தனர். பின்னாட்களில் மிளகாய் எனும் தாவரம் கண்டுபிடிக்கப்பட்ட போது தான் மிளகு+காய் = மிளகாய் என்று கூறப்பட்டது.

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்ததாம்.

மிளகில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன, அவை கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள், தயாமின், ரிபோபிலவின் மற்றும் ரியாசின் போன்றவை ஆகும்.

மிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும். அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதை தினம் அரை ஸ்பூன் வீதம் முன்று வேளைகள் சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை குணமாகும்.

கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். கல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்றும் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .

மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மற்றும் மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply