மிகவும் களைப்பாக உணர்கிறீர்களா அப்ப அவசியம் படிங்க

Loading...

மிகவும் களைப்பாக உணர்கிறீர்களா அப்ப அவசியம் படிங்கஒவ்வொரு நாளும் காலையில் எழும் போது நன்கு புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். ஒருவேளை நன்கு தூங்கி எழுந்த பின்னரும் மிகவும் களைப்பாக உணர்ந்தால், அதற்கு முதன்மையான காரணமாக இரவில் மிகவும் தாமதமாக தூங்கியது இருக்கும். மாறாக, நன்கு தூங்கி எந்த ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால், உடனே நம் உடல் மீது செலுத்த வேண்டும்.

ஏனென்றால் உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளால் தான் உடல் சோர்வாக இருக்கிறது. இப்போது உடலை சோர்வடையச் செய்யும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

* தற்போது மன அழுத்தத்தினால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் அதிகம் இருக்கும் போது, மூளையானது சோர்வாகிவிடும். அதிலிருந்து வெளிவர நண்பர்களுடன் அல்லது மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியே சுற்றுவது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்று நேரத்தை செலவிட வேண்டும்.

* இன்றைய காலத்தில் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று பலர் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். இப்படி தவிர்ப்பதால், உடலுக்கு வேண்டிய ஆற்றலானது கிடைக்காமல் உடல் சோர்வாகிவிடுகிறது. மேலும் என்ன தான் மற்ற வேளைகளில் உணவை தவறாமல் உட்கொண்டாலும், அதனால் உடலில் கொழுப்புக்கள் அதிகரிக்குமே தவிர, ஆற்றல் கிடைக்காது உடல் சோர்வுடனேயே இருக்கும். ஆகவே காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.

* உடலின் ஆற்றலை சீராக பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தண்ணீரை தற்போது பலர் அதிகம் அருந்துவதில்லை. இதனால் உள்ளுறுப்புகளுக்கு வேண்டிய நீர்ச்சத்தின் அளவு கிடைக்காமல் வறட்சியடைந்து, உடல் சோர்வடைகிறது. எனவே உடல் சுறுசுறுப்புடன் இருக்க தினமும் தவறாமல் சரியான அளவில் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.

* வேலைப்பளு அதிகம் இருப்பதாலும், இரவில் தாமதமாக தூங்குவதாலும், பலரால் காலையில் சீக்கிரம் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகிறது. இப்படி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இல்லாமல், உடல் சோர்வுடனேயே இருக்கிறது. ஆகவே முயற்சி செய்து தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள்.

* சிலர் விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்குவார்கள். இப்படி வார இறுதியில் எந்நேரமும் தூங்கியவாறே இருந்தால், அன்று உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் உடலில் கொழுப்புக்களாக தங்கி, உடல் பருமனை அதிகரித்துவிடும். பின் உடல் பருமனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

* முக்கியமாக வைட்டமின் பி12 சத்து குறைபாடு இருந்தாலும், உடல் சோர்வு அதிகம் இருக்கும். எனவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply