மாம்பழ பாயசம் | Tamil Serial Today Org

மாம்பழ பாயசம்

Loading...

மாம்பழ பாயசம்
தேவையான பொருட்கள் :

தித்திப்பான மாம்பழக் கூழ் – ஒரு கப்,
சர்க்கரை – அரை கப்,
பால் – ஒரு லிட்டர்,
அரிசிக்குருணை – 2 டேபிள்ஸ்பூன்,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கண்டென்ஸ்டு மில்க் – 2 டேபிள்ஸ்பூன்,
மேங்கோ எசன்ஸ் (விரும்பினால்) – சில துளிகள்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்.


செய்முறை :

* முந்திரி, திராட்சையை சிறிது நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.

* மீதமுள்ள நெய்யை விட்டு அரிசிக் குருணையைப் போட்டு லேசாக வறுத்து, அதில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* அரிசி நன்றாக வெந்து கண்ணாடி போல் ஆகி பால் சிறிது குறுகியதும், கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

* பிறகு கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, மாம்பழக் கூழையும் சேர்க்கவும்.

* எல்லாம் சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கி, முந்திரி – திராட்சை, மேங்கோ எசன்ஸ் சேர்த்துப் பரிமாறவும்.

* சுவையான மாம்பழ பாயசம் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN