மாதுளம் பழத்தின் பயன்கள்

Loading...

மாதுளம் பழத்தின் பயன்கள்மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு, மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன.
மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்துக் காணப்படுகின்றது.
இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப்பொருள் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
பயன்கள் புளிப்பு ரக மாதுளம் பழத்திலிருந்து 3 டீஸ்பூன் சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாக தடவி வந்தால், பூச்சி வெட்டு உள்ள இடத்தில் நன்றாக முடி வளரும். 3 டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு ஆகிய இரண்டையும் முதல் நாள் இரவே சுடு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நின்று வளர ஆரம்பிக்கும். மாதுளம் பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து அதை பவுடராக்கி அதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை சம அளவு கலந்து, தினமும் குளித்த பிறகு இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நமது உடலில் உள்ள துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகிவிடும். ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். ஒரு மாதுளம் பழத்தை நான்காக வெட்டி, அதில் ஒரு துண்டை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, ஆற வைத்து அந்த தண்ணீரில் கண்களை கழுவினால், கண் பொங்குவது உடனே நிற்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply