மாங்கா வத்தக் குழம்பு

Loading...

மாங்கா வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1 (நறுக்கியது)
பூண்டு – 6 பற்கள்
கத்திரிக்காய் – 1 (நறுக்கியது)
மாங்கா வத்தல் – 10 துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 3 கப்


தாளிப்பதற்கு…

நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிட வதக்கவும். பிறகு அத்துடன் கத்திரிக்காய், மாங்கா வத்தல் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து 1 நிமிடம் பிரட்டி, தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அரிசி மாவை நீரில் கலந்து குழம்பில் ஊற்றி கிளறி 5 நிமிடம் பச்சை வாசனைப் போக கொதிக்க வைத்து இறக்கினால், மா வத்தல் குழம்பு ரெடி!!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply