மருத்துவ பயன்களை கொண்ட மாதுளை

Loading...

மருத்துவ பயன்களை கொண்ட மாதுளைமாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. நோய்களை கட்டுப்படுத்தி உடலை வளமாக்குவதில் மாதுளை சிறந்த பங்காற்றுகிறது.
பெண்களின் உள்ளத்தில் பிறர் எளிதில் அறிய இயலாத வகையில் ரகசியங்கள் இருப்பது போல, மாதுளம்பழத்தில் விதைகள் மறைந்திருப்பதால் ‘மாது உள்ளம் பழம்’ என்பதே மாதுளம்பழமாக அழைக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.
லத்தீன் மொழியில் Pomum என்றால் ஆப்பிள், Granatum என்றால் விதைகள் என்று பொருள். பழமையான ஆங்கிலத்தில் மாதுளை ‘Apple of Grenada’ என்று அழைக்கப்பட்டது.
குரானில் மாதுளம் பழத்தை “சொர்க்கத்தின் தோட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் ஈரான் மற்றும் வட இந்தியா என்று கூறப்பட்டாலும், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களில் பரவலாக பயிர் செய்யப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள நகரம் ஒன்றிற்கு Granada என பெயரிடப்பட்டுள்ளது, இது Pomegranate என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
கிரேக்க நாட்டில் மாதுளம் பழத்தை திருமணச் சடங்கின் போதும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதேபோன்று அசர்பைஜான் என்ற நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மாதுளம் திருவிழா நடைபெறுகிறது.
தமிழர்கள் பழங்காலத்தில் உணவாக மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடி, கறிவேப்பிலை ஆகியவற்றை பசு நெய்யில் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

இத்தனை மகத்துவங்கள் கொண்ட மாதுளையின் பலன்கள்,

மாதுளம்பழ விழுதையும், வெண்ணெயையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாக குழைத்து அதை தோலில் தொய்வு ஏற்பட்டிற்கும் இடத்தில் பேஸ்ட்டாக தடவி பின்பு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் தோல் சுருக்கம் நீங்கும்.

மாதுளைப் பழத்தை தொடர்ந்து நாற்பது நாட்கள் ஜூஸ் செய்து அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீக்கி, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும், மேலும் நினைவாற்றல் பெருகும்.
மாதுளம் பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இறுமல் காணாமல் போய்விடும்.
மாதுளம் பழ சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வருவது நிற்கும்.
மாதுளம் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சலை தடுக்கும்.
மாதுளம் பழச் சாற்றினை ஒரு பாத்திரத்தில் விட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்து பின்பு அதை அருந்தினால் பற்களும், எலும்பும் உறுதியாகும்.
மாதுளம் பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து அதை பவுடராக்கி அதனுடன் பயத்தம் பருப்பு பவுடரை சம அளவு கலந்து, தினமும் குளித்த பிறகு இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நமது உடலில் உள்ள துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகிவிடும்.
ஒரு டீஸ்பூன் மாதுளை யூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply