மருத்துவ நன்மைகள் கொண்ட பூக்கள்

Loading...

மருத்துவ நன்மைகள் கொண்ட பூக்கள்மலர்கள் தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல, உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் கூட. ஆம், நம் அழகாக, அழகிற்காக, காதலின் அடையாளமாக, பெண்களின் கவர்ச்சியாக பார்க்கும் பல பூக்கள் சிறந்து மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளன.
நமக்கு தெரிந்தவரை, வாழைப்பூ, முருங்கை பூ மட்டும் தான் உன்ன உகந்தது என எண்ணி வருகிறோம். ஆனால், பெண்கள் தலையில் சூடும் சில பூக்களும் கூட உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கின்றது.
* இதய வலி மற்றும் பலவீனம் உள்ளவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை இரண்டு வேளை குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியம் அடையும். மேலும், இந்த பூவை சுடுநீரில் இட்டு தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் அழுக்கு நீங்கும், தலை முடி சுத்தமாகும்.

* காதலின் இலட்சினையாக திகழும் ரோஜா இதயத்திற்கு வலிமை அளிக்க கூடியது. பாலில் ரோஜா இதழ்களை கலந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி பிரச்சனை தீரும். மேலும், இது இரத்தவிருத்தியை ஊக்கமளிக்கும்.

* பெண்களுக்கு மிகவும் பிடித்த மலரான மல்லிகை, கண் பார்வைக்கு உகந்தது. கண்ணுக்கு சக்தியளித்து கண்பார்வையை மேம்படுத்தும். மேலும், மல்லிகை உணர்சிகளை தூண்டும் பண்புடையது ஆகும். இது கிருமிநாசினியாகவும் பயனளிக்கிறது.

* அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பாலுடன் சேர்த்து காய்ச்சி சக்கரை சிறிதளவு சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே உடல் சூடும், பித்த சூடும் நீங்கும்.

* ஆண்மையை அதிகரிக்கச் செய்து தாதுப் பெருக்கம் அடையச் செய்யும் சிறந்த நன்மை அளிக்கும் தன்மையுடையது முருங்கைப்பூ.

* கர்ப்பம் தரித்த பெண்கள் 5 முதல் 10 வரை குங்குமப்பூ இதழ்களை பகல் மற்றும் இரவு வேளைகளில் பாலில் போட்டு காய்ச்சிக் குடித்து வர பிறக்கின்ற குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும்.

* வேப்பம்பூ ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். உடலிலும், வீட்டிலும் இருக்கும் நச்சுக்களை, பூச்சிகளை அழிக்கும் நற்பண்பு கொண்டுள்ளது வேப்பம்பூ. சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும் தன்மையும் வேப்பம்பூவிற்கு உள்ளது.

* உடல் சூடு, நீரிழிவு, போன்றவற்றுக்கு ஆவாரம்பூ ஓர் சிறந்த மருந்து. ஆவரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கலந்து குளித்து வந்தால் உடல் துர்நாற்றம் நீங்கும்.

* உடல் செரிமானத்தை ஊக்குவித்து, மலமிளக்க பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும் தன்மைக் கொண்டுள்ளது வாழைப்பூ

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply