மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா

Loading...

மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா
தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/4 கிலோ
துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு


அரைக்க…

துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்


தாளிக்க…

பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
கல்பாசி – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு துவரம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து மசாலாக்கள் ஒன்று சேர நன்கு வதக்கி, அத்துடன் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் கழுவி வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 8-9 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு குழம்பை கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா தயார்..!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply