மட்டன் ரோஸ்ட்

Loading...

மட்டன் ரோஸ்ட்

என்னென்ன தேவை?

மட்டன் – 1/2 கிலோஉப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமசாலாவிற்கு…

தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டிவெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 3 கறிவேப்பிலை – தேவையான அளவுதக்காளி – 1 இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுகரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டிகொத்தமல்லி – தேவையான அளவுமுழு கருப்பு மிளகு – 2 தேக்கரண்டிபெருஞ்சீரகம் – 2 தேக்கரண்டிஎப்படிச் செய்வது?

ஒரு பிரஷர் குக்கரில் மட்டனை எடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகும் வரை சமைக்கவும். ஒரு சிறிய கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகம் எடுத்து பொன் நிறமாக வறுக்கவும். ஒரு ஜாரில் அதை எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும். இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் அவற்றை சமைக்கவும். தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். சமைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி இறுதியாக வறுத்த பொடி தூவி, கொத்தமல்லி இலை நிறைய சேர்த்து இறக்கவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN