ப்ராக்கோலி ரோஸ்ட்

Loading...

ப்ராக்கோலி ரோஸ்ட்
தேவையான பொருட்கள்

ப்ராக்கோலி – 2 கப்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள் (பேஸ்ட் செய்தது)
எலுமிச்சை தோல் பொடி – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கொதிக்கும் நீரில் ப்ராக்கோலியைப் போட்டு 3 நிமிடம் ஊற வைத்து பின் நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் ப்ராக்கோலியைப் போட்டு, அத்துடன் எள் தவிர அனைத்தையும் சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மைக்ரோ ஓவனை 215 டிகிரி உ-யில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.
பின் பேக்கிங் ட்ரேயில் பிரட்டி வைத்துள்ள ப்ராக்கோலியை வைத்து, அதன் மேல் எள்ளை தூவி விட்டு, மைக்ரோ ஓவனில் வைத்து 15-20 நிமிடம் டோஸ்ட் நிலையில் வைக்க வேண்டும். பின் க்ரில் நிலையில் மாற்றி 2 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ராக்கோலி ரோஸ்ட் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply