பொலிவான சருமம் வேண்டுமா ஆப்பிள் ஃபேஸ் பேக் போடுங்க

Loading...

பொலிவான சருமம் வேண்டுமா ஆப்பிள் ஃபேஸ் பேக் போடுங்கஅனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் ஆப்பிள். பொதுவாக தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அத்தகைய சத்துக்கள் நிறைந்த ஆப்பிளானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு இதனை சாப்பிட்டால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இப்போது ஆப்பிளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

* ஆப்பிளை பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகமானது பளிசென்று இருக்கும். மேலும் இப்படி தினமும் செய்தால், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

* நல்ல புத்துணர்ச்சியான சருமம் பெற, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply