பூமியை போன்றே காட்சியளிக்கும் செவ்வாய்

Loading...

பூமியை போன்றே காட்சியளிக்கும் செவ்வாய்செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் இயந்திரம் 360 டிகிரி கோணத்தில் சுழன்றபடி நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களை படம்பிடித்துள்ளது.
இந்த புகைப்படங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதி பூமியை போன்றே காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய கியூரியோசிட்டி விண்கலம், கடந்த 5ம் திகதி செவ்வாய் கிரகத்தின் நான்குபுறங்களையும் 360 டிகிரி கோணத்தில் சுழன்று படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.
பனோரமிக் பாணியில் எடுக்கப்பட்ட 130-க்கும் மேற்பட்ட படங்களை ரோவர் இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மஸ்ட் கமெரா படம்பிடித்துள்ளது.
கடந்த 2011 நவம்பர் 6ம் திகதி செவ்வாயில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியோசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்கலம் 2012, ஆகஸ்ட் 6ம் திகதி செவ்வாயின் காலே கிரேட்டர் பகுதியில் தரையிறங்கியது.
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் பங்கெடுத்து 3 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி புரூஸ் முர்ரேவின் நினைவாக, ரோவர் இயந்திரம் தரையிறங்கிய பகுதிக்கு முர்ரே பட்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த பகுதியை தான் ரோவர் இயந்திரம் படம்பிடித்து அனுப்பி வைத்துள்ளது. சுற்றிலும் பாறை மற்றும் குன்றாக காட்சியளிக்கும் அந்த படங்கள் காண்போரை பிரமிக்க வைக்கின்றன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply