புரோக்கோலி பொரியல்

Loading...

புரோக்கோலி பொரியல்
தேவையானப்பொருட்கள்:

புரோக்கோலி – 1 (பெரிய அளவு)
பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்ப்புன்
பச்சை மிளகாய் – 2
எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

புரோக்கோலியின் பூவை தனியாக எடுத்து நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்பை மிருதுவாக (குழைய கூடாது) வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 4 அல்லது 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது உப்பைச் சேர்த்து புரோக்கோலி துண்டுகளைப் போட்டு ஓரிரு வினாடிகள் கொதிக்க விட்டு, உடனே எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அத்துடன் புரோக்கோலியைப் போடவும். ஓரிரு சிட்டிகை உப்பைத் தூவி, மூடி போட்டு, மிதமான தீயில் ஓரிரு வினாடிகள் வேக விடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை (தண்ணீரில்லாமல் வடித்து, பிழிந்து சேர்க்கவும்) சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி இறக்கி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply