பிரைட் ரைஸ்

Loading...

பிரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:


சாதத்திற்கு

பாஸ்மதி அரிசி – 3 கப்
பால் – 6 கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 5
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

கிளறுவதற்கு:

வெங்காயம் – ஒன்று
கேரட் – ஒன்று
கார்ன் – ஒரு கப்
கோஸ் – ஒரு கப்
பீன்ஸ் – ஒரு கப்
முட்டை – 3
பெப்பர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
பிரைட் ரைஸ்

செய்முறை:

வெங்காயம், கோஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை நீளமாகவும், பீன்ஸைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நன்கு களைந்து வைக்கவும். மிக்ஸியில் சீரகம் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு அரைத்து வைக்கவும்.
ரைஸ் குக்கரில் அரிசியுடன் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுது, வெண்ணெய், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் பால் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு முட்டையை உடைத்து ஊற்றி, பெப்பர் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். முட்டை உதிரியாக வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் வெண்ணெயைச் சேர்த்து நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். (நன்கு வதக்க வேண்டாம். லேசாக வதங்கினால் போதும்)
அத்துடன் முட்டையைப் போட்டு பிரட்டவும்.
அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும், வேக வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து, காய்கறிகளுடன் சாதம் ஒன்றாகச் சேரும்படி பிரட்டி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
சுவையான ஃப்ரைட் ரைஸ் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply