பிரட் ரோல்

Loading...

பிரட் ரோல்

தேவையான அளவு :

பிரட் – 8-10 துண்டுகள்
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து தோல் உரித்தது)
பச்சை பட்டாணி – 1/2 கப்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
சீஸ் – 10 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு



செய்முறை :

உருளைக்கிழங்கை ஒரு பவுலில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு அதோடு பச்சை பட்டாணி, எலுமிச்சை சாறு, சீஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பிரட் துண்டை எடுத்து, இரு முனைகளையும் வெட்டி, தண்ணீரில் ஒரு முறை லேசாக பிரட்டி எடுத்து கொள்ளவும். முக்கியமாக தண்ணீரில் நனைக்கும் போது, நீண்ட நேரம் வைத்து விட வேண்டாம். பிறகுஅந்த பிரட் துண்டை ஒரு முறை தண்ணீர் முற்றிலும் வடிந்துவிடபடி பிளிந்துவிடுங்கள். இதனால் பிரட்டில் இருக்கும் அதிகப்படியான தண்ணீர் வெளி வந்துவிடும்.

இப்போது அந்த உருளைக்கிழங்கு கலவையை அந்த பிரட்டில் வைத்து, அதனை சுருட்டி, முனையை நன்கு கைகளால், அழுத்தவும். ஈரம் இருப்பதால், பிரட் ஒட்டிக் கொள்ளும். இதேப்போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்யவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சுருட்டி வைத்திருக்கும் பிரட் துண்டுகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்னர் அதனை ஒரு தட்டில் டிஸ்யூ பேப்பரை விரித்து, அதில் வைத்து பரிமாறலாம்.

இப்போது சுவையான பிரட் ரோல் குழந்தைகள் ருசிக்க தயார்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply