பிரட் ஊத்தப்பம்

Loading...

பிரட் ஊத்தப்பம்

என்னென்ன தேவை :
ரொட்டி – 4 துண்டுகள் (பழுப்பு அல்லது வெள்ளை), ரவை – 1/2 கப், தயிர் – 1/2 கப், மைதா – 1 டீஸ்பூன், அரிசி மாவு – 1 டீஸ்பூன், தண்ணீர் – 1/2 கப், உப்பு தேவையான அளவு, இஞ்சி – 1/2 டீஸ்பூன் (நறுக்கியது), வெங்காயம் நறுக்கியது – 3 டீஸ்பூன், துருவிய கேரட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 1 (துருவியது), தக்காளி விழுது – 1 டீஸ்பூன்,கொத்தமல்லித் தழை – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.


எப்படிச் செய்வது:

பிரெட்டை துண்டாக்கி தயிர், ரவை, மைதா, அரிசி மாவு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் துருவிய கேரட், வெங்காயம், இஞ்சி, தக்காளி விழுது, பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கலந்து ஊத்தப்பமாக சுட்டு பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply