பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க

Loading...

பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்கதிருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சந்தோஷ அனுபவங்கள் என்றhலும், அவற்றின் மூலம் அவர்கள் இழக்கும் விஷயங்களும் நிறைய உள்ளன. குழந்தை பெற்றுக் கொள்வதெனத் தீர்மானித்து விட்டீர்களா? அதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டிய சில விஷயங்கள் இதோ…

* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தாpத்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தாpத்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.

* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷhக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சாpயான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.

* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது. கர்ப்பத்திற்கு முன்பு வரை செக்ஸுக்குப் பயன்பட்ட உங்கள் அங்கங்கள் அதற்குப் பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பிற்கும், தாய்ப்பாலு}ட்டவுமே பிரதானமாகப் பயன்படுகின்றன. இதனால் பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

* கரு உண்டாகும் வரை நீங்கள் கல்லைத் தின்றhலும் சொpக்கும். கருத்தாpத்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் மிக மிக சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியாது. அது கூடாது, இது கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும். எனவே கர்ப்பம் தாpப்பதற்கு முன்பே நாவை அடக்காமல் விரும்பியதை ஒரு பிடிபிடியுங்கள்.

* Nhpய வெளிச்சம் முகத்தில் படும்வரை தூங்குவதென்பதெல்லாம் நீங்கள் கர்ப்பம் தாpக்கும் வரைதான். பிறகு உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பல தூக்கமில்லாத இரவுகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டாக வேண்டும். எனவே கர்ப்பம் தாpக்கும் முன்பே தூக்கத்தையும் அனுபவித்து விடுங்கள்.

* மாதம் தவறhமல் பியூட்டி பார்லர் போகிறவரா நீங்கள்? அப்படியானால் குழந்தை உண்டான பிறகு அழகாகக் காட்சியளிப்பதைக்கூட நீங்கள் தற்காலிகமாகத் தியாகம் செய்தாக வேண்டியிருக்கும். குழந்தை வயிற்றிலிருக்கும் போது திரெடிங், வாக்சிங், பிளீச்சிங் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

* கர்ப்பம் தாpத்த பிறகு சாதாரண தலைவலி, காய்ச்சலுக்குக்கூட கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிட முடியாது. எனவே அதற்கு முன்பிலிருந்தே இயற்கை வழியில் உங்கள் உடல் உபாதைகளை சாp செய்து கொள்ளப் பழகுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply