பிக்காசாவினை மூடுகிறது கூகுள்

Loading...

பிக்காசாவினை மூடுகிறது கூகுள்சென்ற பிப்ரவரி 12 அன்று கூகுள் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தன்னுடைய போட்டோக்களுக்கான செயலியான பிகாஸோவினை (Picasa) உடனடியாக மூடுகிறது. ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்னர், கூகுள் அறிமுகப்படுத்திய ‘கூகுள் போட்டோஸ்’ செயலியின் மீது, தன் முழு கவனத்தையும் திருப்புவதற்காக, பிகாஸோவினை மூடுகிறது.

ஒரே மாதிரியான செயல்பாட்டுக்கு, இரு வேறு செயலிகளை வழங்குவதைக் காட்டிலும், கூடுதல் வசதிகள் கொண்டுள்ள ‘கூகுள் போட்டோஸ்’ செயலியின் வழி சேவைகளை வழங்கலாம் என்று கூகுள் முடிவெடுத்துள்ளது.

‘கூகுள் போட்டோஸ்’ செயலி, மொபைல் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் செயல்படுகிற்து. கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளது.

தற்போது பிகாஸோவில் உள்ள ஆன்லைன் ஆல்பம் மற்றும் அவற்ரில் உள்ள போட்டோக்கள் அனைத்தும் கூகுள் போட்டோஸ் அக்கவுண்ட்டிற்கு மாற்றப்படும். மாற விரும்பாதவர்கள், தொடர்ந்து பிகாஸோ ஆல்பத்தில் உள்ள போட்டோக்களைப் பார்வையிடலாம், டவுண்லோட் செய்திடலாம் மற்றும் அழிக்கலாம்.

ஆனால், அந்த செயலிக்கான மேம்படுத்தும் பைல்கள் இனி வழங்கப்பட மாட்டாது. படங்களை இனி மேல் புதியதாக அதில் இணைக்க முடியாது.

”இந்த மாற்றத்தினால், பயனாளர்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், அதற்காக எங்களை மன்னித்து விடுங்கள்” என ‘கூகுள் போட்டோஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply