பாலக்கீரை குழிப்பணியாரம்

Loading...

பாலக்கீரை குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் :

இட்லிமாவு – ஒரு கப்
பாலக் கீரை – அரை கட்டுதாளிக்க :

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
முந்திரி – 6 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
வெங்காயம் – ஒன்று
பச்சைமிளகாய் – இரண்டு
கறிவேப்பிலை – சிறிதுசெய்முறை :

* பாலக்கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து முந்திரி போட்டு வறுத்த பின் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து பாலக்கீரை உப்பு சேர்த்து வதக்கி 5 நிமிடம் வேக வைத்த பின் தாளித்த கலவையை இட்லி மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி, தீயின் தனலை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.

* ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.

* சுவையான பாலக் குழிப்பணியாரம் ரெடி.

* கொத்தமல்லி துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply