பாகற்காயின் மருத்துவ பயன்கள்

Loading...

பாகற்காயின் மருத்துவ பயன்கள்கொடி வகையைச் சேர்ந்த பாகற்காயில் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டின், கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, மினரல்ஸ், பி காம்ளெக்ஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் சிறிதளவு விட்டமின் C போன்ற சத்துகள் நிறைந்துள்ளது.
மருத்துவ பயன்கள் சுவாசக் கோளாறுகளான ஆஸ்துமா, சளிப்பிடித்தல், இருமல் போன்ற நோய்களை தீர்ப்பதில் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. பாகற்காயின் சாற்றினை தினந்தோறும் குடித்து வந்தால் கல்லீரல் வலுப்படும், மேலும் ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். பாகற்காய் மற்றும் அதன் இலைகளை சூடான தண்ணீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். பாகற்காயை தினமும் உணவாக உட்கொண்டால், சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள் மற்றும் ஆழமான சருமத் தொற்றுகள் போன்றவை நீங்கும். இன்சுலின் என்ற ஒருவகை வேதிப்பொருள் பாகற்காயில் உள்ளதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply