பளபளப்பான சருமம் பெற வேண்டுமா | Tamil Serial Today Org

பளபளப்பான சருமம் பெற வேண்டுமா

Loading...

பளபளப்பான சருமம் பெற வேண்டுமாதற்போது மாறி வரும் காலக்கட்டத்தில் அனைவருக்கும் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனை அதிக அளவில் வருகிறது.
இதனால் ஆண், பெண் இருவருமே சருமத்தை பராமரிப்பதிலும் தலைமுடி பராமரிப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு என்ன செய்யலாம் என்று நாள்தோறும் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சருமம் மற்றும் தலைமுடியை பராமரிக்க சில வழிமுறைகளை பார்க்கலாம்.
பளபளப்பான சருமம் பெற வேண்டுமா? சருமத்தை நன்றாக பாதுகாக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இதனால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும். உடல் பளப்பளக்கும். பழ ஜூஸ் அதிகம் குடிக்கவும். இதனால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும் சருமத்துக்குக் கட்டாயமாக மாய்ச்சரைஸர் பயன்படுத்த வேண்டும். அது சருமத்துக்கு ஊட்டமளிக்கும். மேலும் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கும். பாலை முகம் முழுவதும் பூசி மெதுவாக இரண்டு நிமிடம் தேய்த்து முகத்தை கழுவவேண்டும் . இதனால் தோலினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். ஆண்களுக்கு சிகெரட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும். அதனை போக்க பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் மஞ்சள் தேய்த்து குளித்து வாருங்கள் பருக்களும் அகலும். நாளடைவில் முகம் பொலிவுபெறும்.தலைமுடி பிரச்சனை நீங்க கேசப் பராமரிப்புஷாம்புவை தேர்ந்தெடுக்கும் போது, ஒவ்வொருவரின் தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் தன்மைக்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.ஹேர் ஜெல் மற்றும் ஹேர் சீரம் பயன்படுத்துவது உங்களுடைய கூந்தலைப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.முடி வளர்வதற்கு கறிவேப்பிலை, செம்பருத்தி இலை, வேப்பிலை அரைத்து காயவைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்க்கவும். இதனால் தலையில் பேன், பொடுகு நீங்கும் தலை முடி மென்மையடையும் .சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

Loading...
Rates : 0
VTST BN