பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் கருஞ்சீரகம்

Loading...

பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் கருஞ்சீரகம்உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நம் வீட்டின் சமையலறையிலேயே நிறைய மருந்துகள் இருக்கின்றன. சொல்லப்போனால் நம் வீட்டின் சமையலறை ஒரு அருமையான மருந்தகம் என்றே சொல்லலாம். ஏனெனில் சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வைத் தருபவை. அவற்றில் ஒன்று தான் கருஞ்சீரகம். இப்போது அந்த கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.

பொதுவாக கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியவை. சிறந்த வலி நிவாரணியாகவும், கிருமிநாசியாகவும் செயல்படும் கருஞ்சீரகம், உடலினுள் ஏற்படும் வலியையும், குடல் புண் மற்றும் பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கிறது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையத்தில் அழிந்து வரும் அணுக்களுக்கு மீண்டும் புத்துயிர் வழங்கும் ஆற்றல் கருஞ்சீரகத்திற்கு உண்டு.

அதுமட்டுமின்றி கருஞ்சீரகம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நுரையீரல் அடைப்பைப் போக்கும், வலிப்பைக் குறைக்கும். மேலும் கருஞ்சீரகம் பிரசவத்தின் போது அதிக அளவில் இரத்தம் வெளியேறுவதைத் தடுத்து, கர்ப்பப்பை வலிக்கு நல்ல அருமையான மருந்தாகவும் பயன்படுகிறது.

அதிலும் கருஞ்சீரகத்தை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து வாயை கொப்பளித்தால், வாய் துர்நாற்றம், பல் வலி போன்றவற்றிற்கு நல்ல பலன் தரும்.

கருஞ்சீரகத்தை பொடி செய்து தேன் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால், சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீர் அடைப்பு நீங்கும்.

கருஞ்சீரகத்தை பசும்பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பவர்கள், கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, பின் மூக்கில் 2 சொட்டுகள் விட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் கருஞ்சீரகம் கபம், குறட்டை, காய்ச்சல், மூக்கடைப்பு போன்றவற்றிற்கும் நல்ல பலன் தரும்.

முடி அதிகம் உதிர்ந்தால், கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து, அல்லி எண்ணெயில் கலந்து ஊற வைத்து, அன்றாடம் தடவி வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply