பருப்பு சாதம்

Loading...

பருப்பு சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி – 1 டம்ளர்
துவரம் பருப்பு – கால் டம்ளர்
வெங்காயம் – 1 (மீடியம் சைஸ்)
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை – சிறிது
உப்பு
எண்ணெய்செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி, பருப்பை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
* தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.
* பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


குறிப்பு :

* மிளகாய்த்தூளுக்கு பதிலாக சாம்பார்த்தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தால் ஒருசுவை.
* தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
* இதில் காய்கறிகள் போட்டும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply