பருப்பு உருண்டை

Loading...

பருப்பு உருண்டை
தேவையான பொருள்கள் :


உருண்டைக்கு :

கடலை பருப்பு – 1 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு


குழம்புக்கு :

சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டி ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
கறிவேப்பிலை – 1 கொத்து
புளி – நெல்லிக்காய் அளவு


செய்முறை :

* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).

* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.

* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

* கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.

* இந்த குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply