பருக்களால் உண்டான தழும்புகளை எளிதில் நீக்க சில டிப்ஸ்

Loading...

பருக்களால் உண்டான தழும்புகளை எளிதில் நீக்க சில டிப்ஸ்எண்ணெய் பசை சருமத்தினருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வருவதுடன், அதனால் தழும்புகளும் அதிகம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய கருமையான தழும்புகள் சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். ஆகவே பலர் இந்த தழும்புகளைப் போக்க பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் அந்த க்ரீம்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.

ஆனால் முகத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு தினமும் மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும், சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும். இப்போது தழும்புகளைப் போக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போம்.

* கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* ஒரு பௌலில் கசகசா பொடி, கஸ்தூரி மஞ்சள், தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். முக்கியமாக இந்த முறையால் சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

* பாசிப்பருப்பை பொடி செய்து, அதில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்குவதுடன், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

* துளசி சாறு அல்லது புதினா சாற்றை பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply