பயனர்களை கவர இன்ஸ்டாகிராம் தரும் அதிரடி வசதி

Loading...

பயனர்களை கவர இன்ஸ்டாகிராம் தரும் அதிரடி வசதிபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் என்னதான் வீடியோக்கள், புகைப்படங்களை பகிரும் வசதி தரப்பட்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமிற்கு என்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கின்றது.

பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள இத் தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழும் வசதி தரப்பட்டுள்ளதுடன், அவற்றிற்கு கமண்ட் (Comment) செய்யும் வசதியும் சேர்த்து தரப்பட்டுள்ளது.

எனினும் ஒரு முறை ஏதும் தவறாக கமண்ட் செய்துவிட்டால் அதனை நீக்கலாமே தவிர எடிட் செய்ய முடியாது.

எனவே இவ் வசதியானது பயனர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக இருந்து வந்தது.

இதனைக் கருத்தில் கொண்ட இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது பயனர்கள் தமது கணக்கினூடாக மேற்கொள்ளும் கமண்ட்களை எடிட் செய்யும் வசதியை புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னர் பேஸ்புக் வலைத்தளமும் இதே பாணியில் தனது கமண்ட் வசதியினை மாற்றியமைத்திருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply