பன்னீர் பக்கோடா

Loading...

பன்னீர் பக்கோடா
தேவையான பொருட்கள்

பனீர் – கால் கப்
கைகளால் உதிரியாக்கவும்
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
நீள்வாக்கில் அரிந்த வெங்காயம் – 1/2 கப்
உப்பு – தேவைக்கேறப
மிளகாய்ப்பொடி – 1/2 ஸ்பூன்
நறுக்கிய முந்திரி – 10
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி
புதினா தழை – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பன்னீரை உடைத்து உதிரியாக்கவும்
இதோடு மற்ற மாவு வகைகளையும் உப்பு, மிளகாயத்தூள் சேர்த்து நன்றாக பிசறிவிடவும்.
கடைசியில் வெங்காயம், முந்திரி, கொத்துமல்லி, புதினா சேர்த்து லேசாகக் கலக்கவும்.
இரண்டு ஸ்பூன் சூடான எண்ணெயை இதனுடன் கலக்கவும்.
இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து மாவு ஒன்றொடென்று ஒட்டிக் கொள்ளும்படி பிசறி விடவும். கைகளினால் கலவையை எடுத்து சூடான எண்ணெயில் நேரடியாக பிரித்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply