பன்னீர் டிக்கா

Loading...

பன்னீர் டிக்கா
தேவையான பொருட்கள் :

பன்னீர் – 300 கிராம்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

பிரட் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

முதலில் பன்னீரை சற்று நீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள், பிறகு ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பன்னீரைப் போட்டு பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகளை, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ருசியான பன்னீர் டிக்கா ரெடி!!

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply