நொறுக்கு தீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது எப்படி

Loading...

நொறுக்கு தீனி சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது எப்படிடயட்டில் இருப்பவர்கள் சரியான மணிக்கு எழுந்து சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நன்றாக தொப்பலாக நனையும்படி ஜிம்மில் உடற்ப்யிற்சி செய்வார்கள். எல்லாம் சரிதான். ஆனால் நொறுக்கி தீனிகள் திண்பதில் ஒட்டு மொத்த கட்டுகோப்பையும் கோட்டை விட்டுவிடுவார்கள்.
noru
என்ன செய்தாலும் இப்படி சாப்பிடுவதை கட்டுப்படுத்தமுடியவில்லை என கவலைபடுகிறீர்களா? அப்படியென்றால் இங்கே குறிப்பிடும் டிப்ஸ்களை முயன்று பாருங்கள்.
நேரம் கெட்ட வேளையில் உங்களுக்கு பசி எடுத்தால் நீங்கள் போதிய அளவு நீர் குடிக்கவில்லையென அர்த்தம். ஆகவே தினமும் நிறைய நீர் குடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடும் ஆசை வராது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிறைய பேர் அவசர கதியில் மெல்லாமல் முழுங்கி விடுவார்கள். இதனால் போதிய அளவு வயிற்றிற்கு தராமலேயே உணவு அடைத்துவிடும். இதனால் குறைந்த அளவே உண்பீர்கள் வேகமாய் பசி எடுக்கும். ஆகவே மெல்ல மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணமும் நன்றாக நடக்கும். மேலும் துண்டாக்கிய கேரட், வெள்ளரி ஆகியவை மெல்ல மென்றுதான் உண்ண வேண்டும். ஆகவே இந்த மாதிரியான காய்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பிடும்போது உள்ள உங்கள் மன நிலை நீங்கள் சாப்பிடும் அளவை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. சாப்பிடும்போது கோபமாகவோ வெறுப்பாகவோ சாப்பிட்டால் அது உடலில் ஒட்டாது. நீங்கள் சாப்பிட்டது போலவே உணர மாட்டீர்கள்.
ஆகவே எது எப்படியென்றாலும் சாப்பிடும் நேரத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிமையான இசையை கேட்டுக் கொண்டே சாப்பிடலாம். அல்லது மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்தபடி சாப்பிடுங்கள். வயிறும் மனதும் நிறையும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply