நேந்திரம் பழ ஜாம்

Loading...

நேந்திரம் பழ ஜாம்

தேவையான பொருட்கள் :

நன்கு கனிந்த நேந்திரம் பழம் – 4
வெல்லம் – ஒரு கப்,
நெய் – கால் கப்.



செய்முறை :

* நேந்திரம் பழத்தை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து ஒரு கப் அளவுக்கு விழுதாக்கவும்.

* வெல்லத்தைக் சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

* அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வடிகட்டிய வெல்லம், அரைத்த நேந்திரம் பழ விழுது, நெய் சேர்த்து கைவிடாமல் நன்கு சுருள கிளறவும்.

* ஓரங்களில் நெய் கசிய ஆரம்பித்தவுடன் இறக்கவும்.

* சூடு ஆறியதும் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும்.

* சுவையான நேந்திரம் பழ ஜாம் ரெடி.



குறிப்பு:

இந்த ஜாமுடன் தேங்காய்ப் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்க… பாயசம் ரெடி! பலாச் சுளையிலும் இதே முறையில் செய்யலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply