நெத்திலி மரவள்ளிக்கிழங்கு அவியல்

Loading...

நெத்திலி மரவள்ளிக்கிழங்கு அவியல்சுத்தம் செய்யப்பட்ட நெத்திலி மீன்கள் 100 கிராம்,
மரவள்ளிக் கிழங்கு அரைக்கிலோ,
மிளகாய்தூள் 1 ஸ்பூன்,
மல்லித்தூள் 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் சிறிது,
பூண்டு 4 பல்,
சீரகம் அரைஸ்பூன்,
நல்லமிளகு அரை ஸ்பூன்,
தேங்காய் துருவல் 5 ஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
புளி நெல்லிக்காய் அளவு.

தேங்காய், மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், பூண்டு, நல்லமிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்யப்பட்ட நெத்திலி மீன், சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் அரைத்த மசாலாவை சேர்க்கவும். அத்துடன் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து, கிழங்கு நன்கு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும். இதில் விருப்பம் உள்ளவர்கள் புளியை குறைத்துக் கொண்டு நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கலாம். பின்னர் அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் வற்றி வெந்ததும், இறக்கவும். வித்தியாசமான சுவையில் நெத்திலி மரவள்ளிக்கிழங்கு அவியல் தயாராகிவிடும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply