நுரையீரல் பிரச்சனையை குணமாக்கும் பீன்ஸ்

Loading...

நுரையீரல் பிரச்சனையை குணமாக்கும் பீன்ஸ்சமீபத்தில் பீன்ஸை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது காற்று மாசுபடுதலாலும், புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுகிறது.

பெருகியுள்ள வாகனங்களால் காற்றும், சுற்றுச்சூழலும் அதிகம் மாசடைந்திருப்பதால், சுமார் 60 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இப்படி சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மக்களைத் தாக்குகின்றன.

ஆகவே நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க மக்கள் அன்றாட உணவில் எந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் குறைப்பது தெரிய வந்தது.

பச்சை பீன்ஸில் வைட்டமின் பி6, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி பீன்ஸில் புரோட்டீன் வளமாக உள்ளது. அத்தகைய பீன்ஸை தினமும் சுமார் 50 கிராம் உட்கொண்டு வந்தால், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனையில் இருந்து 90 சதவீதம் வரை தடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் பீன்ஸை முழுமையாக வேக வைத்து சாப்பிடுவதை விட, அரை வேக்காட்டுடன் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. மேலும் பீன்ஸை வேக வைக்கும் போது பயன்படுத்தும் நீரை வடிகட்டு கீழே ஊற்றாமல், அதனைப் பயன்படுத்தி சாம்பார் அல்லது சூப் தயாரிக்கும் போது பயன்படுத்தினால், பீன்ஸின் மூலம் முழுச்சத்துக்களையும் பெற முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply