நுனிமுடி பிளவை தவிர்க்க வேண்டுமா

Loading...

நுனிமுடி பிளவை தவிர்க்க வேண்டுமாநுனி முடி பிளவு பல பெண்களின் பிரச்சனையாக உள்ளது. நுனி முடி பிளவு எப்பொழுது ஏற்படுகிறதெனில் முடி வறண்டிருக்கும் போதும், அதிகப்படியான இரசாயனங்கள், வலுவான ஷாம்பு உபயோகிப்பதனாலும் மற்றும் சூரிய ஒளியின் போதும் நுனி முடி பிளவு ஏற்படுகிறது. இது முடி வளர்ச்சியை குறைப்பதுடன், போஷாக்கற்ற தோற்றத்தையும் கொடுக்கிறது.


ஆயில் மசாஜ்

எண்ணைக்குளியல் முடியில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் , பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை தனியாகவோ இல்லை இவற்றின் கலவையையோ பயன்படுத்தி முடியை மசாஜ் செய்யவும்.

அல்லது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து ஒரு இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் குளித்து வர பிளவு குறைவதைக் காணலாம்.


முட்டை பேக்


தேவையான பொருட்கள்

முட்டை -2 (வெள்ளைக்கரு மட்டும்)

தேன் – 1 தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் -2 முதல் 3 தேக்கரண்டி

இந்த கலவையை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தால், முடி மென்மையாவதுடன், பிளவும் குறையும்.


நுனி முடியை வெட்டுக்கள்

மாதம் ஒருமுறை நுனி முடியை வெட்டுங்கள். ஈரமாக உள்ள போது முடியை வாராதீர்கள். தலைக்கு என்னை தடவும் போது நுனிக்கும் தடவுங்கள்.


ட்ரையர்

ஹேர் ட்ரையர், முடியை நேராக்கும் சாதனங்கள் போன்றவற்றை அடிக்கடி உபயோகிப்பதை தவிர்க்கவும். தலை முடி ஈரமாக உள்ள போது அதை இயற்கையான முறையில் காய வைக்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply