நீண்ட நேரம் தூக்கம் உடல் எடையைக் குறைக்குமாம்

Loading...

நீண்ட நேரம் தூக்கம் உடல் எடையைக் குறைக்குமாம்தற்போது பலர் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இல்லாமல் பருத்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, அத்தகையவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க கடுமையாக போராடுகின்றனர். அதிலும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லை என்பதற்காக கடுமையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதற்காக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி ஆய்வு செய்ததில், உடல் எடையை குறைக்க ‘நல்ல நிம்மதியான தூக்கமே நல்ல மருந்து’ என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் நதானியல் வாட்சன் தலைமையிலான குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்தனர். அதில், ‘உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறு தான் காரணம்’ என தெரியவந்தது. அதன் நடவடிக்கைகளை செயலிழக்கச் செய்ய தினமும் இரவில் 7-9 மணிநேரம் நன்கு தூங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நண்பர்களே! நீங்க இந்த முறையில் எடையை குறைக்க ரெடியா இருக்கீங்களா.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply