நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய தானாக அழியக் கூடிய மின்கலம்

Loading...

நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய தானாக அழியக் கூடிய மின்கலம்இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாட்டில் மின்சாரம் என்பது அவசியமாகும். இவ்வாறு மின்சாரத்தினை வழங்குவதில் மின்கலங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
எனினும் தற்போது உருவாக்கப்படும் மின்கலங்கள் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றன.
அத்துடன் பாவனைக் காலம் முடிந்ததும் அவை இலகுவில் அழிக்க முடியாது இருப்பதனால் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு தற்போது தானாக அழியக் கூடிய மின்கலம் ஒன்றினை லோவா ஸ்டேட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இம் மின்கலமானது லித்தியம் அயனைக் கொண்டு 2.5 வோல்ட் மின்னழுத்தத்தை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்குலேட்டர் ஒன்றிற்கு தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் வரை மின்சாரத்தை வழங்கக்கூடிதாகவும், நீரில் இட்டவுடன் 30 நிமிடங்களில் தானாகவே அழியக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தானாக அழிவதனால் இம் மின்கலத்தினால் சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply