நண்டு பிரியாணி

Loading...

நண்டு பிரியாணி

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி -300கிராம்

நண்டு -300கிராம்

வெங்காயம் -2

தக்காளி -2

பச்சை மிளகாய் -2

இஞ்சி, பூண்டு விழுது -2ஸ்பூன்

தயிர் – 4ஸ்பூன்

தேங்காய் பால் – 4ஸ்பூன்

எலுமிச்சை -1

பட்டை -2

கல்பாசி -2

சிவப்பு மிளகாய் தூள் -1 1/2ஸ்பூன்

மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்

மல்லித்தூள் -1ஸ்பூன்

கரம் மசாலா -1/2 ஸ்பூன்

புதினா, கொத்தமல்லி, உப்பு,

நெய், எண்ணெய் -தேவையான அளவுஎப்படி செய்வது?

நண்டு பிரியாணி செய்ய முதலில் குக்கரில் அரிசியை போட்டு போதுமான அளவு தண்ணீர் சிறிது எண்ணெய் சேர்க்கவும் (சாதம் உதிரியாக வர) உப்பு கலந்து சாதம் வேகவைத்து அதில் நெய் ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய்,ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும் கலர் மாறியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.

பின்னர் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை கலந்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேகவிடவும்.

பின்னர் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply