நகங்களை பாதுகாக்கும் எளிய வழி முறைகள்

Loading...

நகங்களை பாதுகாக்கும் எளிய வழி முறைகள்நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல அது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஏனெனில் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நகம் காட்டிக்கொடுத்துவிடும்.நகங்கள் வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால், அவை உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது வெட்டுவதை தவிருங்கள்.நகத்தின் மேல் பேஸ்கோட் தடவி அதன் மேல் விரும்பும் நிறத்தில் நகச்சாயத்தை இரண்டு முறை தடவ வேண்டும். அப்போதுதான் நிறத்தின் அடர்த்தி அழகாக இருக்கும்.தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.சிலருக்கு நகங்கள் வளராமல் குட்டையாக இருக்கும். அவர்கள் மாதம் ஒருமுறையாவது, பெடிக்யூர், மெனிக்யூர் செய்து கொள்ளவேண்டும். கை, கால்களை நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் நகம் நன்றாக வளரும்.வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவேண்டும். அதில் நகமும், கைகளும் நன்றாக மூழ்கும் படி ஊறவைக்கவேண்டும். இது கைகளும், நகமும் வறட்சியடைவதை தடுக்கும்.நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.புதினா இலை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலி போன்றவை குணமாகும்.இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.எலுமிச்சை ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு கூடும்.தினமும் நெயில் பாலிஸ் போடுவது கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நாட்களாவது இடைவெளி விடும்போதுதான் நகத்தின் உண்மை தன்மையை அறிய முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply