தொழில்நுட்பத்தினை திருடிய குற்றச்சாட்டிற்கு ஆளாகிய SAMSUNG

Loading...

தொழில்நுட்பத்தினை திருடிய குற்றச்சாட்டிற்கு ஆளாகிய SAMSUNGசிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் சம்சுங் நிறுவனம் தற்போது தொழில்நுட்பத்தினை திருடிய குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது, இரு தினங்களுக்கு முன்னர் சம்சுங் நிறுவனம் Samsung Galaxy Note 7 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் இக் கைப்பேசியின் தொடுதிரையில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் தமது கைப்பேசிகளிலிருந்து திருடப்பட்டுள்ளதாக மோட்டோரோலா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மோட்டோரோலா நிறுவனம் தமது டுவிட்டர் பக்கத்தில் தமது கைப்பேசியின் புகைப்படம் ஒன்றினையும் இணைத்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

View image on Twitter
மோட்டோரோலா நிறுவனம் 2013ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பத்தினையே சம்சுங் நிறுவனம் தற்போது திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறெனினும் இவ்வாறான தொழில்நுட்பத்தினை நோக்கியா நிறுவனம் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்த N86 கைப்பேசியில் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply