தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற தினமும் இந்த ஜூஸ் குடிங்க

Loading...

தொப்பையை குறைத்து தட்டையான வயிறு பெற தினமும் இந்த ஜூஸ் குடிங்கஉட்கார்ந்தே வேலை செய்வதாலும், சரியான அளவு உடல் உழைப்பு இல்லாததாலும் குறைவாக சாப்பிட்டாலும் கூட இந்நாட்களில் தொடையை தொடும் அளவிற்கு தொப்பை வந்துவிடுகிறது. தொப்பை என்பது உடல் அழகை மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் ஒன்றாகும்.

நீரிழிவு, சீரான இரத்த ஓட்டம் இன்மை, டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியில் குறைபாடு என பல பிரச்சனைகள் இன்று தொப்பையின் காரணமாக தான் ஏற்படுகிறது. தொப்பையை குறைக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். அதே போல, நமது உடலில் கொழுப்பை குறைக்கும் ஹார்மோன்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் கொழுப்பை கரைத்து, தொப்பையை குறைக்க பயனளிக்கும் ஜூஸை பற்றி இனிக் காண்போம்…

கிரீன் டீ பேக் ஒன்றுஇஞ்சி சிறிதளவுதேன் (தேவைப்பட்டால்)

முதலில் ஓர் கப் நீரை நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு ஃபிரஷ்ஷான இஞ்சியை கழுவி, தோல் சீவி, துருவி எடுத்து கொள்ளுங்கள். துருவிய இஞ்சியை நீரில் 10-15 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள் .

அதன் பிறகு கிரீன் டீ பேக்கை செங்குத்தாக நீரில் மூழ்கும் வண்ணம் இடவும். ஓர் ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்துவிடலாம். ஒருவேளை நீங்கள் இனிப்பு பிரியராக இருந்தால் அல்லது இனிப்பு இல்லாத ட்ரிங்க்ஸ் குடித்தால் குமட்டல் வரும் எனில் நீங்கள் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் இந்த ஜூஸை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால். உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும். ஒருவேளை உங்களுக்கு முன்பே ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் உங்கள் டயட்டிஷியனிடன் கலந்தாலோசித்துவிட்டு இந்த ஜூஸை குடிக்க துவங்குங்கள்.

இந்த ஜூஸ், தட்டையான வயிறு பெருவதற்கு மட்டுமின்றி, உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கவும் கூட பெருமளவு உதவுகிறது. மேலும் இந்த ஜூஸில் நாம் பயன்படுத்தும் இஞ்சி, தேன் போன்றவை முற்றிலும் இயற்கையான பொருட்கள் என்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.

மேலும், இந்த ஜூஸ் உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கவும், வலுப்படுத்தவும், மூளையின் செயற்பாட்டை சீராக்கவும் பயனளிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply