தேங்காய் சிக்கன் ரோஸ்ட்

Loading...

தேங்காய் சிக்கன் ரோஸ்ட்
என்னென்ன தேவை?
சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 2 பெரியது

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை – சிறிது

தேங்காய் – 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

பட்டை – 1 சிறிய

கருப்பு ஏலக்காய் – 1

பச்சை ஏலக்காய் – 3

எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன்


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம், பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய் சேர்த்து 30 நொடிகள் சமைக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும். பிறகு கரம் மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, சிக்கனை சேர்த்து அதனுடன் தண்ணீர் 1/2 கப் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி கொண்டு கடாயை மூடி 30 முதல் 35 நிமிடங்கள் சமைக்கவும்.

இப்போது மூடி திறந்து தேங்காய் சேர்த்து நன்கு கலந்து, தேங்காய் நன்றாக நிறம் மாறும் வரை வறுக்கவும். இப்போது, கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply